குடியாத்தம்: அதிமுக என்ற ரயில் ஓடி கொண்டே தான் இருக்கும். அதில் ஏறுபவர்கள் ஏறலாம், இறங்குபவர்கள் இறங்கலாம் என குடியாத்தத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நிருபர்களிடம் கூறிதாவது:
எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்ந்தெடுத்து சபாநாயகருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்பது தான் மரபு. அதிமுக மிக பெரிய கட்டமைப்பு. ஒருவர், இருவர் செல்வதால் கட்சி சிதிலமடையாது. அதிமுக என்ற ரயில் ஓடிக்கொண்டே தான் இருக்கும். ஏறுபவர்கள் ஏறி கொள்ளலாம், இறங்குபவர்கள் இறங்கி கொள்ளலாம். ஆனால் ரயில் நிற்காது.இவ்வாறு அவர் கூறினார்.