இந்த பயிற்சிக்கு தொடக்கப் புள்ளியாக இருப்பவர்கள் மதுரை அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் மூத்த ஆலோசகர்களான டாக்டர் ஷியாம் டி, டாக்டர் கெவின் ஜோசப் ஜே மற்றும் நரம்பியல் மயக்கவியல் துறை மற்றும் கிரிட்டிகல் கேர் மூத்த ஆலோசகர் டாக்டர் நிஷா பி ஆகியோர் இந்த பயிற்சியை கருத்தியல் செய்து ஏற்பாடு செய்தனர். இதன் பயிற்சியாளர்களாக சுவிட்சர்லாந்தில் உள்ள பொள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்கள் ஆவர்.
மதுரை கிளஸ்டர், அப்போலோ மருத்துவமனையின் சிழ9 திரு. பி நீலகண்ணன் அவர்கள் கூறுகையில் ஆசியாவில் முதன்முறையாக இந்த ரோபோடிக் உருவப்படுத்துதல் பயிற்சியை அறிமுகப்படுத்துவதில் அப்போலோ மருத்துவமனை மதுரை, பெருமை கொள்கிறது என்றும் முதல் முயற்சியிலேயே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்றார்.
சுவிட்சர்லாந்தில் பெர்னில் உள்ள சர்ஜன்ஸ்லேப் ஏஜி-யின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். ஃப்ரெட்ரிக் ஜான்சன் ஜோசப் கூறுகையில், இந்த கூட்டு முயற்சியால் பக்கவாதம், மூளைக் கட்டிகள் மற்றும் அனீரீசிம்கள் போன்ற முக்கியமான முனைக் கோளாறுகளுக்கு சிறந்த சிகிச்சையாக அமைகிறது என்றார். புதிய வழிகளைத் திறக்கிறது. இதுபோன்ற தொழில்நுட்பத்தின் பயிற்சி இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.
மேலும் மருத்துவத்துறை ஜேடிஎம்எஸ்.டாக்டர் பிரவீன்ராஜன், மார்க்கெட்டிங் பிரிவு பொதுமேலாளர் கே.மணிகண்டன், செயல்பாடுகள் பொது மேலாளர் திருமதி கற்பகவள்ளி ஆகியோர் உடனிருந்தனர்.