இந்த நபரிடமிருந்து பெறப்பட்ட தற்கொலை கடிதத்திலும், நிதேஷ் தனது நீண்டகால நோய் குறித்தும், சிகிச்சைகளால் அதிகரிக்கும் கட்டண பில்கள் குறித்தும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய பெற்றோர்கள் இதற்கு மேல் அதிகப் பணம் செலவிட வேண்டாம் என முடிவு செய்தவர், வலியின்றி இறந்து போவதற்கான வழிகளை ஆன்லைனில் ஆராய்ந்திருக்கிறார். இந்த முறையைக் கண்டறிந்தவர், இது குறித்தான அதிக வீயோக்களை பார்த்திருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளனர்.
அதிகரித்த மருத்துவ கட்டணத்தை எண்ணி, தன்னுடைய பெற்றோருக்குத் தொந்தரவு தரக்கூடாதென இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் மனவேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.
எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல; பிரச்னைகள் வரும்போது அதற்கான தீர்வைத் தேடுங்கள், உங்களது வாழ்விற்கான முடிவை அல்ல… சிந்தித்துச் செயல்படுங்கள். பிடித்தமானவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். பிரச்னைகளுக்குள்ளே தான் நீங்கள் தேடிக் காணாத தீர்வுகளும் உள்ளன!