அதானி ஸ்பான்சர் செய்த விருதை வாங்க மறுத்த கவிஞர் சுகிர்தராணி: “வெளிச்சத்துக்காக செய்யவில்லை”

Share

  • திவ்யா ஜெயராஜ்
  • பிபிசி தமிழ்

சுகிர்தராணி

பட மூலாதாரம், Sukirtha Rani/FB

படக்குறிப்பு,

சுகிர்தராணி

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் தனக்கு அறிவித்திருந்த ‘தேவி’ விருதை வேண்டாம் என கூறியிருக்கிறார் தமிழ்க் கவிஞர் சுகிர்தராணி. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அதானி குழுமம் முதன்மையான ஸ்பான்சராக இருந்ததுதான் தான் விருதினை மறுப்பதற்குக் காரணம் என்கிறார் அவர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் பெண் ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ‘தேவி’ என்ற விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பெண் ஆளுமைகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞருமான சுகிர்தராணிக்கு ‘இலக்கியம் & தலித் இலக்கியத்தில்’ சிறந்த பங்களிப்பைச் செய்துவருபவர் என்ற அடிப்படையில் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விருதை மறுப்பதாக அறிவித்தார் கவிஞர் சுகிர்தராணி.

இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ‘ இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அதானி குழுமம்தான் முதன்மை ஸ்பான்சராக இருக்கிறது, நான் பேசும் அரசியலுக்கும், கொண்டுள்ள கொள்கைக்கும், சிந்தனைக்கும் அதானி நிதி உதவி அளிக்கும் ஒரு நிகழ்ச்சியிலிருந்து விருது பெறுவதில் எனக்கு சிறிதும் உவப்பில்லை, எனவே நான் இந்த விருதை மறுக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் இலக்கிய உலகில் முக்கிய பங்கு வகித்து வரும் சுகிர்தராணி, கடந்த 25 ஆண்டுகளாக பெண் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com