அதானி பங்கு வீழ்ந்ததை போல் மோடியும் வீழ்வார்: மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி பேச்சு

Share

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், இந்தியாவில் பிரதமர் மோடி வளர்ந்தபோது அதானியும் வளர்ந்துள்ளார். தற்போது அதானியின் பங்கு வீழ்ச்சி அடைந்ததை போல், ஒருநாள் பிரதமர் மோடியும் செல்லாக்காசாக மாறி வீழ்ச்சியடைவார். இவர்கள் தேசபக்தி என்ற பெயரில் ஒட்டுமொத்த நாட்டையே கொள்ளையடித்து உள்ளனர். கொரோனாவை எதிர்கொண்டு ஒன்றிய அரசு நிதிச்சரிவை சந்திக்கவில்லை என்கிறார் ஒன்றிய நிதியமைச்சர். ஆனால், கொரோனாவின்போது அதானியின் பங்கு 6 சதவீதம் அதிகரித்தது எப்படி? டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ் அதானியை பிரதமர் மோடி வளர்த்துள்ளார்.

அதானிக்கு பணச்சிக்கல் என்றதும் பிரதமர் மோடி தேசபக்தி பற்றி பேசுகிறார். மோடி வளர்கிற ஒவ்வொரு படிக்கட்டிலும் அதானியும் வருகிறார். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டும் என திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் தற்போது சாமானியர்களின் குரலாக இல்லை. மோடியின் திட்டங்களை வெளியில் இருந்து இயக்குபவர்தான் அதானி. அவரை பற்றி நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சம் விவாதம் நடத்த வேண்டும் என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி வலியுறுத்தி பேசியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com