100 பேர் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களில் 70 பேருக்கு நேர் பார்வை நன்றாகவே இருக்கும். ஆனால் பக்கவாட்டுப் பார்வை குறைவாக இருக்கும். மீதமுள்ள 30 பேருக்கு நடுப் பார்வை குறைவதால் எழுதுவதும், படிப்பதும் குறைந்துவிடும். ஏனெனில் கண்ணின் மையப்பகுதியான மேகுலா வழியாகத்தான் எழுதுவது, படிப்பதெல்லாம் நடக்கிறது. அந்தப் பகுதியில் `மேகுலோபதி’ (maculopathy) எனும் பாதிப்பு வந்திருக்கும்.

சில நேரங்களில் அந்தப் பகுதியில் நீர் கோக்கலாம். அதை `ஆப்டிகல் கோஹெரன்ஸ் டோமோகிராபி’ (OCT ) எனும் டெஸ்ட்டின் மூலம்தான் கண்டறிய வேண்டும். அதற்கு சிகிச்சை அளித்து நீரை வெளியேற்றிவிட்டால் பார்வையில் முன்னேற்றம் தெரியும். சில நேரம் கண்களுக்குள் மெம்ப்ரேன் எனப்படும் சவ்வு உருவாகும். `செலஃபேன் மேகுலோபதி’ (Cellophane maculopathy) எனப்படும் இதை விட்ரெக்டமி எனும் அறுவைசிகிச்சையின் மூலம்தான் நீக்க வேண்டியிருக்கும்.
விழித்திரையின் மையப்பகுதி அழிய ஆரம்பித்துவிட்டால் அதற்கு சிகிச்சை கிடையாது. சாதாரண கண்ணாடிகளின் மூலம் சரி செய்ய முடியாத பிரச்னையை ‘லோ விஷுவல் எய்ட்ஸ்’ (Low visual aids) எனப்படுகிற மேக்னிஃபையிங் லென்ஸ் வைத்து சரி செய்யலாம்.
தவிர்க்க முடியுமா?
சொந்தத்தில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பதன் மூலம் இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.
வைட்டமின் ஏ அதிகமுள்ள உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவது அவசியம்.
– பார்ப்போம்
– ராஜலட்சுமி