‘அண்டை நாடுகள் இதை செய்ய வேண்டும்’ – இரான் புதிய அதி உயர் தலைவரின் முதல் கருத்து

Share

'அண்டை நாடுகள் இதை செய்ய வேண்டும்' - இரான் புதிய அதி உயர் தலைவரின் முதல் கருத்து

பட மூலாதாரம், Iranian President’s Press Office / Handout /Anadolu via Getty Images

படக்குறிப்பு, மொஜ்தபா காமனெயி

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தற்போது 13-வது நாளில் நுழைந்துள்ள நிலையில், பிராந்தியத்தின் பல பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயியின் அறிக்கை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது,

‘கொல்லப்பட்ட இரானியர்களின் ரத்தத்திற்காகப் பழிவாங்க இரான் தயங்காது’ என்று மொஜ்தபா காமனெயி கூறுகிறார்.

போருக்கு மத்தியில் கப்பல் போக்குவரத்து மீதான சமீபத்திய தாக்குதல்களில், இராக் அருகே இரண்டு டேங்கர்கள் ‘ஏவுகணைகளால்’ தாக்கப்பட்டன.

அதே நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அருகே ஒரு கொள்கலன் கப்பலும் ‘ஏவுகணை’ ஒன்றால் தாக்கப்பட்டது. இந்த ஏவுகணைகள் குறித்த விவரங்கள் தெரியவில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com