அடேங்கப்பா… தேங்காய் பூவை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?! | Youth, beauty and health are all given… coconut flower!

Share

“தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே . தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கின்றன.

தேங்காய் பூவை சாப்பிடும்போது கிடைக்கும் சுவைக்காகவே மக்கள் அதிகம் அதை விரும்புகிறார்கள். தேங்காய் பூவிலிருந்து பல ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன.

தேங்காயின் உள்ளே இருக்கும் தண்ணீர்தான் தேங்காய் பூவாய் மாறுகிறது. முதலில் ஒரு சாக்குப்பையில் சிறிது மண் அதன் மேல் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதனுள்ளே தேங்காய்களை காற்று படாதவாறு வைக்க வேண்டும். மூன்று மாதங்கள் அதை திறக்காமல் அப்படியே விட்டுவிட வேண்டும். பிறகு, அதை இரு துண்டாக பிரித்து பார்த்தால் தேங்காயின் உள்ளே முழுவதும் தேங்காய் பூ உருவாகியிருக்கும். இதை தேங்காய் முட்டை என்றும் சொல்வதுண்டு. ஏனென்றால், இதில் சுவையும், ஆரோக்கியமும் அதிகமாக இருக்கிறது.

தேங்காய் பூ சிறிது வளர்ந்த நிலையில்

தேங்காய் பூ சிறிது வளர்ந்த நிலையில்

தேங்காய் பூவிலிருந்து கிடைக்கும் நன்மைகள்

தேங்காய் பூவில் முக்கியமாக நார் சத்தும், நீர் சத்தும் அதிகமா இருக்கிறது. தற்போது இருக்கும் காலநிலைக்கு இந்த சத்துக்கள் மிகவும் முக்கியமானவை.

நார் சத்து இருப்பதால் செரிமான தன்மையை அதிகப்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. நீர் சத்தினால் நம் உடலில் உள்ள தண்ணீரின் அளவை சமமாக வைத்திருக்க உதவுகிறது.

தேங்காய் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களிலும் லினோலெனிக் அமிலம் இருக்கிறது. இது ஆன்டிஆக்ஸிடென்ட் மட்டும் அல்லாமல் நம் உடம்பிற்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஒரு கலவையாகவும்(compount) இருக்கும்.

கோடைகாலங்களில் நமக்கு ஏற்படும் முக்கிய பாதிப்புகளில் ஒன்று சிறுநீரகக்கல் பாதிப்பு. இதனை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பாதிப்பில் இருந்து தடுக்கலாம். இந்த தேங்காய்ப் பூ நம் சிறுநீரகத்தையும் பாதுகாக்கக்கூடியது. இதில் இருக்கும் தேங்காய் கருவின் மூலம் நம் உடலில் உள்ள செல்கள் அனைத்தும் புத்துணர்ச்சி பெற்று சிதைவு ஆகாமல் பாதுகாக்கிறது. அதனால், சிறுநீரக நோய் மற்றும் சிறுநீர்பையில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் பயன்படுகிறது.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com