மொபைல் யூஸர்களை பொருத்தவரை எப்போதுமே போஸ்ட்பெய்ட் யூசர்களை விட ப்ரீபெய்ட் யூசர்களுக்கு சில கூடுதல் சலுகைகள் இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. ஏனெனில் புதிதாக பிளான்கள் அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில் தாராளமாக அவர்களால் அதன் வேலிடிட்டி, விலை மற்றும் பயன்பாடுகளை பொறுத்து எந்த பிளான் தனக்கு பொருத்தமானது என்பதை யோசித்து அதில் தம்மை இணைத்துக் கொள்ள முடியும்.
இந்தியாவின் முக்கிய டெலிகாம் நிறுவனங்களாக இருக்கும் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறுகிய கால அடிப்படையிலும் நீண்ட கால அடிப்படையிலும் விதவிதமான ரீசார்ஜ் பிளான்களை அடுத்து வருகின்றன.
அதிலும் குறிப்பாக நீண்டகால ரீசார்ஜ் பிளான்கள் பலருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கின்றன. நீண்ட கால பிளானில் தன்னை இணைத்துக் கொள்வதன் மூலம் சில குறிப்பிட்ட விலை சலுகைகளை நம்மால் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஒரு வருடத்திற்கான வேலிடிட்டியுடன் வரும் ரீசார்ஜ் பிளான்களைப் பற்றியும் அதன் பயன்பாடுகளை பற்றியும் இப்போது பார்ப்போம்.
ரூ.1799 – ஏர்டெல்லின் ஒரு வருடத்திற்கான ரீசார்ஜ் பிளான்
வீட்டிலேயே பிராட்பேண்ட் இணைப்பை வைத்திருப்பவர்களுக்கு பெரும்பாலும் மொபைல் ரீசார்ஜ் செய்யும் போது அதிக அளவு பணத்தை டேட்டாவிற்காக செலவு செய்ய விரும்ப மாட்டார்கள். இவர்களுக்காகவே ஏர்டெல் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய ஒரு வருடத்திற்கான ரீசார்ஜ் பிளான் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எந்த ஒரு நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் காலிங் மற்றும் 3600 எஸ்எம்எஸ், இவற்றுடன் கூடிய 24ஜிபி டேட்டாவும் வழங்கபடுகிறது.
இந்த 24 ஜிபி டேட்டாவானது ஒரு முழு வருடத்திற்கும் சேர்த்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ் எம் எஸ் ஐ பொறுத்தவரை ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அளிக்கப்படுகிறது. இவற்றைத் தவிர இலவச ஹலோட்யூன்கள் மற்றும் ஒரு வருடத்திற்கான வின்க் மியூசிக் சப்ஸ்கிரிப்ஷனும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது.
ஒருவேளை கூடுதல் டேட்டாவுடன் கூடிய ஓராண்டிற்கான ப்ளானில் நீங்கள் இணைய விரும்பினால் ரூ.2,999 செலுத்தி தினசரி 2 ஜிபி 4ஜி டேட்டாவை அளிக்கும் ப்ளானில் உங்களை இணைத்து கொள்ள முடியும்
ரூ.2879 – ஜியோவின் ஒரு வருடத்திற்கான ரீசார்ஜ் ப்ளான்
ஜியோவானது ரூ.2,879 என்ற விலையில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய ரீசார்ஜ் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இதில் ஒரு நாளைக்கு 2ஜிபி 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங், இவற்றுடன் ஜியோ சினிமா, ஜியோ டிவி ஆகிய சேவைகளும் அளிக்கப்படுகிறது. 5ஜி ஃபோன் உபயோகிக்கும் யூஸர்கள், ஜியோவின் 5ஜி சேவையையும் இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுவே ரூ.2,999 என்ற திட்டத்தில் இணைந்தால் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவை பெற முடியும்.
இவற்றை தவிர வருடத்திற்கு ரூ..2,545 என்ற கட்டணம் செலுத்தி, தினசரி 1.5ஜிபி டேட்டாவை அளிக்கும் திட்டத்திலும் வாடிக்கையாளர்கள் இணைத்துக் கொள்ள முடியும். ஆனால் இதன் வேலிடிட்டியானது 336 நாட்களுக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும்.
ரூ.1799 – வோடபோன் ஐடியாவின் ஒரு வருடத்திற்கான ரீசார்ஜ் பிளான்
ஏர்டெல்லை போலவே வோடபோன் ஐடியா ரூ.1,799 என்ற விலைக்கு ஒரு வருடத்திற்க்கான வேலிடிட்டியுடன் 24 ஜிபி டேட்டாவுடன் கூடிய அன்லிமிட்டட் காலிங் வசதியை அளிக்கிறது. இதற்கு அடுத்ததாக ரூ.2,899 பிளானில் இணைவதன் மூலம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி 4ஜி டேட்டாவுடன் 100 எஸ்எம்எஸ்மற்றும் அன்லிமிடெட் காலிங் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் வி ஐ மூவிஸ் அண்ட் டிவி செயலிக்கான சப்ஸ்கிரிப்சனும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும்.
மேலும் இத்திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்கள் நள்ளிரவு பன்னிரண்டு மணியிலிருந்து காலை ஆறு மணி வரை வரை டவுன்லோட் மற்றும் ஸ்ட்ரீமிங்கிற்கு அன்லிமிட்ட டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர வார இறுதி நாட்களில் 50 ஜிபி வரையிலான டேட்டா ரோல் ஓவர் வசதியும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. திங்களிலிருந்து வெள்ளி வரை பயன்படுத்தப்படாமல் இருக்கும் டேட்டா ஒட்டுமொத்தமாக சனி மற்றும் ஞாயிறு நாட்களில் வாடிக்கையாளர்கள் சேர்த்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.