உணவு வகைகளில் அதிகப்படியான மக்கள் விரும்பி உண்பது சிக்கனைத் தான். குழம்பு, பொரித்தது, மசாலா என்று இந்த வகையில் இருந்தாலும் அதற்கு தனிப்பட்ட ஒரு ரசிகர் பட்டாளம் இருந்துவருகிறது. அதிலும் குறிப்பாக பட்டர் சிக்கன் என்பது பற்றி சொல்லவே வேண்டாம். அதை வேண்டாம் என்று சொல்லும் நாக்கே இருக்காது. அப்படியான பட்டர் சிக்கன் டிஷ் உருவான கதை தெரியுமா?
இந்த உலகில் மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். பட்டர் சிக்கனை விரும்புபவர்கள் , பட்டர் சிக்கனை அதிகம் மதிப்பிட்டதாக நினைப்பவர்கள், பட்டர் சிக்கனை ருசிக்காதவர்கள். இவை அனைத்திலும், மூன்றாவது வகைக்காக நான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க்கையில் இப்படி ஒரு உணவை ரசிக்காமல் இருக்கிறீர்கள் என்றே சொல்லவேண்டும். அப்படியான டிஷ் பற்றி உங்களுக்கு சொல்கிறோம்.
டெல்லி, இந்தியாவின் சமையல் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. அதன் சுவை பாரம்பரியத்தின் பெரும்பகுதி முகலாயர்களிடம் இருந்து வழிவழியாக வந்துகொண்டு இருக்கிறது. அதில் பல சுவையான சுவாரசியமான உணவுகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் வெல்லும் இந்த டிஷ் சுதந்திரத்திற்கு சில பல ஆண்டுகள் முன்னால் தான் தோற்றம் பெற்றது.
அதை விட சிறப்பான ட்விஸ்ட் என்னவென்றால் இந்த காரசாரமான உணவு உருவான இடம். பட்டர் சிக்கன் தோற்றக் கதை நம்மை ஒரு இனிப்புக் கடைக்கு அழைத்துச் செல்கிறது. பெஷாவரில் உள்ள முகே தா தாபா, மோகா சிங் என்ற முதியவருக்கு சொந்தமானது. இங்குதான் குந்தன் லால் குஜ்ரால் பணிபுரிந்தார். அவர்தான் இன்று நாம் அனைவரும் விரும்பும் தந்தூரி சிக்கனைக் கண்டுபிடிக்க உதவினார்.
ஆம், நீங்கள் படித்தது சரிதான், இந்தக் கதையில் புகழ்பெற்ற தந்தூரி சிக்கன் கண்டுபிடிப்பும் அடங்கும். ஒரு சமயம் மோகா சிங்கின் உடல்நிலை மோசமடைந்து, கடைசியில் அவர் அந்தக் கடையை குஜ்ராலுக்கு விற்றார். அவர் அதை மோதி மஹால் என்று மறுபெயரிட்டார். அப்படி புதிதாக கடை நடத்தி வந்த குந்தன் லால் சிக்கனை சாதாரணமாக செய்யாமல் வித்தியாசமாக செய்ய முயற்சி செய்து கொண்டு இருந்தார்.
அப்போது தான் மசாலாக்களைத் தடவி அனலில் வைத்து சமைத்தால் என்ன என்று ஐடியா உதித்துள்ளது. அனலில் பொறுமையாக சுடும் போது அதன் சுவையே தனியாக இருந்ததால் அப்படியே பேமஸ் ஆனது. ஆனால், தந்தூரிக்கு மேலே நாள் முழுவதும் தொங்கும் தந்தூரி சிக்கன் விற்கப்படாவிட்டால் காய்ந்துவிடும் என்பதை உணர்ந்தார்.
அதை வீணாக்காமல் எப்படியாவது விற்கவேண்டும். இல்லை என்றால் அது வீணாகி நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று யோசித்தார். பின்னர் அவர் ஒரு அடிப்படை கிரேவியை உருவாக்கும் யோசனையை பெற்றார். தக்காளி, வெண்ணெய், கிரீம் மற்றும் சில மசாலாப் பொருட்களுடன் தந்தூரி சிக்கன் துண்டுகளை மூழ்கடித்து, வேகவைத்தார். அப்படி செய்யும்போது சிக்கனின் ஈரப்பதத்தை மீட்டெடுத்து மீண்டும் சுவையாக மாற உதவுகிறது. அப்படி தான் பட்டர் சிக்கன் பிறந்தது.

இந்தியா -பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, குஜ்ரால் டெல்லிக்குச் சென்று தர்யாகஞ்சில் மோதி மஹாலின் முதல் விற்பனை நிலையத்தைத் திறந்தபோது, இந்திய உணவு உலகில் வரலாற்றின் ஒரு பகுதியாக அவர் இருக்கப் போகிறார் என்று அவருக்குத் தெரியாது. இன்று, 70 ஆண்டுகளுக்குப் பிறகு, குஜ்ரால்கள் தங்கள் பேரனால் நிர்வகிக்கப்படும் உலகெங்கிலும் உள்ள உணவகங்களின் சங்கிலியை நடத்தி வருகின்றனர்.
இதையும் பாருங்க : உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் விற்பனை ஆகும் பீட்சாவின் சுவாரசிய கதை!
அது மட்டும் இல்லாமல் பட்டர் சிக்கன் என்பது இந்திய உணவுகளில் உள்ள முக்கிய தனித்துவ உணவுகளில் ஒன்றாக மாறிவிட்டது. உணவைப் பொறுத்தவரை, புதுமை சேர்ப்பு எனும் நிகழ்வு தவிர்க்க முடியாத பகுதியாகும். அந்த வரிசையில் இதுவும் உள்ளது. கடந்த 6 தசாப்தங்களாக பட்டர் சிக்கன் நிறைய மாற்றங்களையும் இடத்திற்கு ஏற்ற தகவமைப்புகளையும் சந்தித்துள்ளது.
எந்தவொரு நவீன அல்லது ஃப்யூஷன் உணவு வகைகளையும் பார்வையிட்டாலும் டகோஸ், பீட்சா, பிரியாணி, ரோல் மற்றும் பை போன்ற வடிவங்களில் பட்டர் சிக்கனின் பங்கு இருந்து வருகிறது. அந்த அளவிற்கு அதன் சுவை மக்களை அதிகம் ஈர்த்துள்ளது. வாழ்க்கையில் ஒரு முறையேனும் டெல்லி சென்று அங்குள்ள சிறந்த பட்டர் சிக்கனை சுவைத்து பாருங்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.