அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: மீல்மேக்கர் (மட்டன்) குழம்பு! – வீட்டிலேயே செய்வது எப்படி?

Share

மீல்மேக்கர் (மட்டன்) குழம்பு

தேவையானவை:

மீல்மேக்கர் – ஒரு கப்

பெரிய வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)

நறுக்கிய தக்காளி – ஒன்று

கறிவேப்பிலை – சிறிதளவு

மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்

சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்

சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க:

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

பட்டை – ஒன்று

பிரிஞ்சி இலை – சிறிதளவு

சோம்பு – அரை டீஸ்பூன்

வெந்தயம் – அரை டீஸ்பூன்

அரைப்பதற்கு:

தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

சோம்பு – அரை டீஸ்பூன்

கசகசா – அரை டீஸ்பூன்

முந்திரி – 6

பூண்டு – 4 பற்கள் (இவை அனைத்தையும் சிறிது தண்ணீர்விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.)

மீல்மேக்கர் (மட்டன்) குழம்பு

செய்முறை:

மீல்மேக்கரை வெந்நீரில் அரைமணி நேரம் ஊறவைத்து பிழிந்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி அதில் சோம்பு, வெந்தயம், பட்டை, பிரிஞ்சி இலை மற்றும் வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதனுடன் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின்னர், மீல்மேக்கரைச் சேர்க்கவும். பின்னர் அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றிக் கலவையைக் கொதிக்கவிடவும். கலவை கொதித்து, மீல்மேக்கர் வெந்ததும் அரைத்துவைத்திருக்கும் தேங்காய் – முந்திரி விழுதைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

தாவர உணவுகளில் அசைவத்துக்கு இணையான அதிக புரதம் கொண்ட ஒரே பொருள் சோயா.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com