அசைவத்துக்கு சவால் விடும் சைவ ரெசிப்பி: கத்திரிக்காய் (நண்டு) வறுவல்! – வீட்டிலேயே செய்வது எப்படி?

Share

கத்திரிக்காய் (நண்டு) வறுவல்

தேவையானவை:

பிஞ்சு கத்திரிக்காய் – கால் கிலோ

சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்)

தக்காளி – ஒன்று

பச்சை மிளகாய் – 5 (நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும்)

பூண்டு – 4 பற்கள்

கறிவேப்பிலை – சிறிதளவு

சீரகத்தூள் – 2 டீஸ்பூன்

சோம்புத்தூள் – 2 டீஸ்பூன்

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

கடுகு – ஒரு டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்

சோம்பு – அரை டீஸ்பூன்

கத்திரிக்காய் (நண்டு) வறுவல்

செய்முறை:

கத்திரிக்காயை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு ஆகியவற்றைத் தாளிக்கவும். பின்னர் அதில் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். பின்னர் இதனுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கிளறி மூடவும். அடுப்பைக் குறைவான தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் கலவையைக் கொதிக்கவிடவும்.பிறகு இதனுடன் மிளகுத் தூள், நசுக்கிய பூண்டு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புச்சத்தைக் குறைக்க கத்திரிக்காய் உதவும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com