அக்னிபத்: “விண்ணப்பித்தால் சமூகரீதியாக தனிமைப்படுத்தப்படுவீர்கள்!” – khap அமைப்பு எச்சரிக்கை | ‘Agnipath’: Khaps In Haryana Threaten To Socially Isolate Those Who Apply For Defence Recruitment Scheme

Share

புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டமான அக்னிபத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், மத்திய அரசோ இந்தத் திட்டத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என உறுதியாக கூறிவருகிறது. குறிப்பாக பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் அக்னி வீரர்களுக்கு தங்களது மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கின்றன. மேலும், அக்னிபத்-திலிருந்து 4 ஆண்டுகள் பணிமுடித்து வெளிவரும் 75 சதவிகித வீரர்களுக்கு, ராணுவ துணைப்படையில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தில் பணியாற்ற விண்ணப்பிக்கும் இளைஞர்களை சமூக ரீதியாக தனிமைப்படுத்துவோம் என ஹரியானாவில் `காப்’ எனும் சமூக அமைப்பு எச்சரித்திருக்கிறது.

அக்னிபத் - திட்டம்

அக்னிபத் – திட்டம்

இந்த அமைப்பானது, வட இந்திய சாதிகள் அல்லது குறிப்பிட்ட இனக்குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சமூக அமைப்பாகும். ஹரியானா, ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த `காப்’ சமூக குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், அக்னிபத் திட்டம் தொடர்பாக ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் நேற்று கூட்டம் நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில் தலைமை தாங்கிப் பேசிய தன்கர் காப் தலைவர் ஓம் பிரகாஷ், “மத்திய அரசின் புதிய ஆள்சேர்ப்பு திட்டமான அக்னிபத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர்களை சமூகரீதியாக நாங்கள் தனிமைப்படுத்த முயல்வோம். அக்னிவீரர் என்ற பெயரில் இளைஞர்களைத் தொழிலாளர்களாக பணியமர்த்த விரும்பும் இந்தத் திட்டத்தை முற்றிலுமாக நாங்கள் புறக்கணிக்கிறோம்” என்று கூறினார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com