அகில்யாபாய் ஹோல்கர்: உடன்கட்டை மரணத்திற்கு தயாரான மால்வாவின் ராணி – முடிவை மாற்றி போர்க்களங்களை வென்றது எப்படி?

Share

அகில்யாபாய் ஹோல்கர்

பட மூலாதாரம், PRABHAT PRAKASHAN

படக்குறிப்பு, அகில்யாபாய் ஹோல்கர் ஔரங்கபாத்தில் பிறந்தார்

மால்வாவின் ராணி அகில்யாபாய், அரசியாக மட்டுமல்ல, தனது பொதுநலப் பணிகளுக்காகவும், நிர்வாகத் திறனுக்காகவும் இன்றும் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூரப்படுகிறார்.

வாரணாசி காசி விஸ்வநாதர் கோவில், குஜராத்தில் உள்ள சோமநாதர் கோவில் என ஆலயங்களை புதுப்பித்தது அவரின் புகழை இந்தியாவில் பரப்பியது. ஆனால், இவற்றைத் தவிர, அவரது சிறப்பான பொதுநல சேவை மற்றும் நிர்வாகத்தில் அவரது பங்களிப்புகளின் பட்டியல் மிகவும் நீளமானது.

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் பயணி பிஷப் ஹெபர், ‘இந்தியாவின் கருணையுள்ள சிறந்த ஆட்சியாளர் அகில்யாபாய்’ என்று வர்ணித்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்னி பெசன்ட், “அகில்யாபாயின் ஆட்சி மால்வாவின் பொற்காலமாக நினைவுகூரப்படும். சமூக நீதி மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை மனப்பான்மை அவரை தெய்வீக நிலைக்கு உயர்த்திவிட்டது ” என்று கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com