ஃபெஞ்சல் புயல்: வானிலை ஆய்வு மைய கணிப்பு தவறியதா? – 5 கேள்விகளும் பதில்களும்

Share


வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 2 மணி 30 நிமிடங்களுக்கு ஃபெஞ்சல் புயலாக உருவானது.

பட மூலாதாரம், IMD.GOV.IN

படக்குறிப்பு, வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 2 மணி 30 நிமிடங்களுக்கு ஃபெஞ்சல் புயலாக உருவானது.

‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறாது’ எனக் கடந்த வியாழன் அன்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், ‘புயலாக மாறி கரையைக் கடக்கும்’ என வெள்ளிக்கிழமை காலையில் அறிவிப்பு வெளியானது.

‘ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும்’ என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதற்கு மாறான சூழல் ஏற்பட்டது ஏன்?

வானிலை ஆய்வு மையம் சொன்னது என்ன?

“தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையே 30ஆம் தேதி காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும்” என வியாழனன்று(நவம்பர் 28) வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியிருந்தார்.

“வியாழன் மற்றும் வெள்ளி காலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தற்காலிகப் புயலாக வலுப்பெறக் கூடும்” எனவும் அவர் தெரிவித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com