ஃபிபா உலகக்கோப்பை: மைதானங்களைப் பாதுகாக்க ட்ரோன்களை பயன்படுத்த திட்டம்

Share

  • கிறிஸ் வாலன்ஸ்
  • தொழில்நுட்ப நிருபர்

இந்த உலகக்கோப்பை போட்டிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க 'ட்ரோன்'கள் பயன்படுத்தப்படவுள்ளன.

பட மூலாதாரம், FORTEM TECHNOLOGIES

ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. சர்வதேச அளவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு என்பதால் போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த உலகக்கோப்பை போட்டிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க ‘ட்ரோன்’கள் பயன்படுத்தப்படவுள்ளன.

பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ‘செய்றகை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் சிறிய ட்ரோன்களை’ வீழ்த்துவதற்காக வலைகளை வீசும் ட்ரோன்கள் இந்த பகுதிகளைப் பாதுகாக்க உதவும்.

கத்தாரின் உள்துறை அமைச்சகத்துடனான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஃபோர்டெம் டெக்னாலஜிஸ் (Fortem Technologies) நிறுவனம் இதற்கான ட்ரோன்களை வழங்கும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com