ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது

Share

கே பாப் பேண்ட்

பட மூலாதாரம், Evrim Aydin/Anadolu Agency via Getty Images

படக்குறிப்பு,

கே பாப் பேண்ட்

உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. கே பாப் இசைக்குழு BTS இன் ஜங் குக் மற்றும் பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

போட்டியை நடத்தும் கத்தார் மற்றும் ஈக்வடார் இடையேயான தொடக்க ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த முறை அனைவரின் பார்வையும் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீதுதான் இருக்கும்.

அர்ஜென்டினா தனது ஆட்டத்தில் நவம்பர் 22 ஆம் தேதி சவுதி அரேபியாவையும், ரொனால்டோவின் போர்ச்சுகல் நவம்பர் 24 ஆம் தேதி கானாவையும் எதிர்கொள்கிறது.

இந்த முறை நடப்பு உலக சாம்பியனான பிரான்ஸ் தனது பட்டத்தை காப்பாற்ற கடுமையாக முயற்சிக்கும். இது தவிர, பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுகல், கடைசி ரன்னர்-அப் குரோஷியா ஆகிய அணிகள் முக்கிய உலகக் கோப்பை கோப்பையை கைப்பற்ற வலுவான போட்டியாளர்களாக உள்ளன.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com