ஃபிஃபாவின் தடையால் இந்திய கால்பந்து வீராங்கனைகளுக்கு என்ன பாதிப்பு?

Share

  • ஜானவி மூலே
  • பிபிசி மராத்தி

ஃபிஃபாவின் சஸ்பெண்ட் நடவடிக்கையால் இந்திய பெண்கள் கால்பந்து வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/AFP

படக்குறிப்பு,

ஃபிஃபாவின் இடைநீக்க நடவடிக்கையால் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

“உலக கோப்பைக்காக நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். நான் அணியில் இடம் பெறவில்லை, ஆனால் விளையாட்டுகளைப் பார்க்கப் போகிறேன். உலக கோப்பையை நடத்துவது நம் நாட்டிற்கு ஒரு பெரிய கெளரவம். ஆனால் இப்போது அது நடக்காது என்ற நிலை வந்திருப்பது என்னை வருத்தப்படுத்துகிறது.”

அகில இந்திய கால்பந்தாட்ட அமைப்பு மீதான ஃபிபாவின் தடை நடவடிக்கை குறித்து கேட்டபோது, மும்பையில் 17 வயது கால்பந்தாட்ட வீராங்கனையான சாய் இப்படித்தான் தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

U-17 எனப்படும் பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான மகளிர் கால்பந்து உலக கோப்பையை நடத்துவதற்கான உரிமையை இந்தியா பெற்றதிலிருந்து சாயைப் போன்ற இளம் கால்பந்து வீராங்கனைகளில் பலர் மகிழ்ச்சியாகவும் ஆவலுடனும் காத்திருந்தனர்.

ஆனால் உலக கால்பந்து அமைப்பான ஃபிஃபா தற்போது இந்திய கால்பந்து விளையாட்டின் நிர்வாக அமைப்பான அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை (AIFF) இடைநீக்கம் செய்துள்ளது. இது இந்திய வீராங்கனைகளின் உற்சாகத்தை குலைத்ததுடன் 2022 அக்டோபரில் நடைபெறவிருக்கும் போட்டியில் அணியின் பங்கேற்பையும் கேள்விக்குரியதாக்கி விட்டது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com