“அன்று தோற்றபோதே நான் இந்தியர்களிடமும் என் நண்பர்களிடமும் கூறினேன், ஓவரா கொண்டாடாதீர்கள் பாகிஸ்தான் நிச்சயம் திரும்பி வந்து பயங்கரமா ஆடும்னு, இந்தியாவைக் கருணையின்றி அடித்து நொறுக்கும் பாகிஸ்தான் என்று கடந்த வீடியோவிலேயே நான் கூறினேன்.
ஆனால் இந்திய அணி தேர்வுக்குழுவிடம் கேட்கிறேன், உங்களது லெவன் என்ன? இறுதி 11 வீரர்கள் என்று தீர்மானிப்பதில் ஏன் இத்தனை குழப்பம்? உங்கள் எதிர்கால வீரர் யார் ரிஷப் பண்ட்டா, தினேஷ் கார்த்திக்கா? தீபக் ஹூடாவா, ரவி பிஷ்னாயா?
முதலில் உங்கள் இறுதி லெவனைக் கண்டுப்பிடித்துக் கொள்ளுங்கள். இந்திய அணி மிகுந்த குழப்பமான தேர்வைச் செய்கிறது. ஏன் இத்தனைக் குழப்பம் என்றுதான் எனக்குப் புரியவில்லை” என்று ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.
Also Read : பாகிஸ்தானுடன் இதனால் தான் தோற்றோம்..! தோல்விக்கு விளக்கமளித்த ரோஹித் ஷர்மா
அக்தர் கூறுவதில் ஒரு பாயிண்ட் உள்ளது. விராட் கோலி, ராகுல் இல்லையென்றால் அவர்களுக்கான இடங்களை தக்க வைக்க அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சில வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிறேன் என்று ஓப்பனிங்கில் எல்லோரையும் இறக்கினார்கள். பவுலிங்கில் சுழற்சி முறை என்று கூறி ஒருவரையும் நிரந்தரமாகச் செட்டி ஆகவிடமால் செய்தார்கள்.
தினேஷ் கார்த்திக் எதற்குத் தேர்வு செய்யப்பட்டார், அஸ்வின் எதற்குத் தேர்வு செய்யப்படுகிறார், பிறகு உட்கார வைக்கப்படுகிறார் என்பதெல்லாம் தெரியவில்லை. செஹல் கடந்த டி20 உலகக்கோப்பையிலேயே செம சாத்து வாங்கினார், அவரை மீண்டும் மீண்டும் வைத்துக் கொள்கின்றனர், செலக்ஷன் லாபி இந்திய அணியில் இருப்பதுபோல்தான் தெரிகிறது, அதைத்தான் அக்தர் ‘குழப்பம்’ என்று இடக்கரடக்கலாகக் கூறுகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.