இருப்பினும், முட்டை அசைவம் என்ற நெருடல் பலருக்கு இருந்து வந்தது. இத்தகைய நிலையில் தான் முட்டை சைவமா, அசைவமா என்ற பெரும் ஆய்வுகளை நடத்தி, இறுதியாக முட்டை சைவமே என்ற முடிவுரையை ஆய்வாளர்கள் முன்வைத்தனர். இந்தப் பதிலும் கூட தீவிர சைவ பிரியர்களுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை. அதாவது அப்போதும் கூட அவர்கள் முட்டை சாப்பிட தயாரில்லை.
இத்தகைய நிலையில், சைவ ப்ரியர்களின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, சைவ முட்டை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சைவ முட்டை எப்படி உருவானது, இதன் சுவை என்ன, இதன் சாதக, பாதகங்கள் என்ன என்பது குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

சைவ முட்டை எப்படி தயாராகிறது:
வீகன் எக்ஸ் எனப்படும் சைவ முட்டைகளானது சோயா, பருப்புகள், பட்டானி, கொண்டக்கடலை போன்ற தாவர மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது தான் சைவ முட்டை ஆகும். முட்டையின் தோற்றம் அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக இதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்க்கபடுகிறது.
ஆம்லெட் முதல் ஆஃபாயில் வரை பல வகைகளில் கோழி முட்டையை போல நம் விருப்பத்திற்கு ஏற்ப சமைத்து சாப்பிடலாம். தோற்றம், சுவை எல்லாமே கோழி முட்டையைப் போலவே இருக்கும்.
Also Read : வீட்டிலேயே பால் இல்லாமல் பன்னீர் செய்வது எப்படி.?
சைவ முட்டையின் பலன்கள்
சைவ முட்டைக்கும், கோழி முட்டைக்கும் பெரிய அளவில் வேறுபாடுகளை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. சுவை, மனம், தோற்றம் எல்லாம் ஒன்று போலவே இருப்பதால் இதை வேறுபடுத்தி அறிவது கடினம் தான். அதே சமயம், முட்டை மீது காதல் கொண்டும், அதை அசைவம் எனக் கூறி ஒதுக்கும் மக்களுக்கு இது பெரும் வர பிரசாதம் ஆகும்.
அதிலும், தாவர மூலப் பொருள்களில் இருந்து தயாராவதால் இதில் கொலஸ்ட்ரால் என்பது கிடையாது.

சைவ முட்டையின் பாதகங்கள்
கோழி முட்டையில் இருக்கும் அளவுக்கு அதிகப்படியான புரதச்சத்து இதில் கிடைக்காது. இவை செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை என்பதால் இதய நலனுக்கு நல்லதல்ல. பெரும்பாலான அசைவ பிரியர்கள், சைவ முட்டை என்று தெரிந்து அதனை வாங்குவதற்கு தயாராக இல்லை. இதனால், இது பெரிய அளவுக்கு பிரபலம் அடையவில்லை. கோழி முட்டையில் இருக்கும் அதே அளவு ஊட்டச்சத்துகள் சைவ முட்டையிலும் உண்டு என்று சொல்ல முடியாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.