பணியிடங்களில் நெருக்கமான சூழல்களில் வேலை பார்ப்பவர்களும், அடிக்கடி மீட்டிங் அட்டென்ட் செய்கிறவர்களும், நிறைய பயணம் செய்பவர்களும் முன்னெச்சரிக்கையாக வருடம் ஒருமுறை ஃப்ளு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
அதே போல நிமோனியா வராமல் தடுக்கும் Pneumococcal தடுப்பூசியும் மிக முக்கியமானது. 60 வயதுக்கு மேலான அனைவரும் இதைப் போட்டுக்கொள்ளலாம். 40 வயதுக்கு மேலுள்ளவர்கள் இணை நோய்கள் இருந்தால் இதைப் போட்டுக்கொள்ளலாம்.
கோவிட் பெருந்தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலருக்கும் நிமோனியா பாதித்த செய்திகளைக் கேள்விப்பட்டிருப்போம். அதாவது, இந்த பாதிப்பில் நுரையீரல் பெரிதும் பாதிக்கப்படும். அது, தீவிரமானால் உயிருக்கே ஆபத்தாகலாம்.
குழந்தைகளையும் நிமோனியா பாதிக்கும் என்றாலும் 60 வயதுக்கு மேலானவர்களும் இணை நோய்கள் உள்ளவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிமோனியாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது இன்றைய தொற்றுச்சூழலில் மிகவும் பாதுகாப்பானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.