துபாயில் கார் ரேஸில் பங்குகொள்ளும் காணொளியை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த காணொளியில் ரேஸர் குறித்தான விஷயங்களை கேட்டறிந்து ரேஸ்கேற்ப உடையணிந்து கார் ரேஸில் ஈடுபடுகிறார். “ அதிசயங்களுடனும், அனுபவங்களுடன் மொமோரிஸ்களை உருவாக்குகிறேன். ” எனவும் இந்த காணொளியோடு பதிவிட்டிருக்கிறார்.


விஜய்காந்த் மகனின் மதுரை படம்!
விஜய்காந்த் மகனான சண்முகப்பாண்டியன், சரத்குமார் ஆகியோர் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் முன்பே வெளியாகியிருந்தது. பொன்ராம் இதற்கு முன்பு `வருதப்படாத வாலிபர் சங்கம்’, `ரஜினி முருகன்’, `சீமாராஜா’ போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். `கொம்பு சீவி’ என இப்படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். 1996-ல் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வைகை அணை பகுதிகளில் நடந்த கதை என சரத்குமார் இத்திரைப்படம் குறித்து பதிவிட்டிருக்கிறார்.