வெற்றிப் பாதைக்குத் திரும்பி பிளே ஆஃப் போட்டியில் நீடிக்கும் பஞ்சாப் கிங்ஸ்

Share

ஐபிஎல் வரலாற்றில் தன் முதல் சதத்தைப் பதிவு செய்தார் ஷ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஐபிஎல் வரலாற்றில் தன் முதல் சதத்தைப் பதிவு செய்தார் ஷ்ரேயாஸ் ஐயர்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனின் 68வது லீக் போட்டியில் இன்று (மே 23) லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை எதிர்கொண்டது பஞ்சாப் கிங்ஸ். லக்னௌவில் நடந்த இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுதத்து. அதிகபட்சமாக ஜாஷ் இங்லிஸ் 72 ரன்கள் எடுத்தார்.

இந்த இலக்கை சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ் 18 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டியது. ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்து தன் அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர். ஓப்பனர் பிரப்சிம்ரன் சிங்கும் அரைசதம் அடித்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி இந்தப் போட்டியில் தோல்வியைத் தவிர்த்தால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அப்படியொரு முக்கியமான போட்டியில் எளிதாக வெற்றி பெற்று, பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது அந்த அணி. 14 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகள் பெற்றிருக்கும் பஞ்சாப் கிங்ஸ், நான்காவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com