வங்கதேசம்: தாரிக் ரஹ்மானிடம் தாராளம் காட்டும் இந்தியா, முகமது யூனுஸிடம் கசப்பாக நடந்துகொண்டது ஏன்?

Share

தாரிக் ரஹ்மானிடம் தாராளம் காட்டும் இந்தியா முகமது யூனுஸிடம் கசப்பாக நடந்துகொண்டது ஏன்?

பட மூலாதாரம், @trahmanbnp

படக்குறிப்பு, தாரிக் ரஹ்மான் மற்றும் முகமது யூனுஸ்

முகமது யூனுஸ் வங்கதேசத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுக நகரமான சிட்டகாங்கில் வளர்ந்தார். அவரது தந்தைக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் அவர் மூன்றாவது குழந்தை.

யூனுஸ் பாய் ஸ்கவுட்ஸில் தீவிரமாக இருந்தார். மேலும் வளரிளம் பருவத்தினராக இருந்தபோது சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்க ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்குச் சென்றார்.

வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க ஃபுல்பிரைட் உதவித்தொகையைப் பெற்றார். அங்கு அவர் 1971இல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மேலும், மிடில் டென்னசி மாகாண பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்பித்தார்.

கடந்த 1971இல் பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்டத்தின்போது, புதிய நாட்டின் அதிகாரபூர்வ அங்கீகாரத்திற்காக யூனுஸ் அமெரிக்க அரசிடம் வற்புறுத்தினார். அதோடு வெளிநாடு வாழ் வங்கதேச சமூகத்திற்காக ஒரு செய்திமடலை நிர்வகிக்க உதவினார்.

யூனுஸ் 1972ஆம் ஆண்டு வங்கதேசத்திற்குத் திரும்பினார். சுதந்திரப் போராட்ட வீரரும் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் புதிய நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளில் பங்கேற்க அவர் ஆர்வமாக இருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com