ரிஷி சுனக் vs லிஸ் டிரஸ்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஏன் பிரிட்டன் பிரதமர் ஆக முடியவில்லை?

Share

  • ஜுபைர் அஹமது
  • பிபிசி செய்தியாளர்

காணொளிக் குறிப்பு,

ரிஷி சுனக் லிஸ் டிரெஸிடம் பிரிட்டன் பிரதமர் போட்டியில் தோற்றது ஏன்?

பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஆகவுள்ளார் கன்சர்வேட்டிவ் கட்சியின் லிஸ் டிரஸ். பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாக அறிவித்தபின் தங்கள் அடுத்த தலைவரை தேர்ந்தடுக்கும் பணிகளை கன்சர்வேட்டிவ் கட்சியினர் தொடங்கினர். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்தி போட்டியில் வென்றுள்ளார் லிஸ்.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிஷி சுனக் தோற்றது எப்படி?

போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் பிரிட்டனின் நிதி அமைச்சராக ரிஷி சுனக்கின் திறமை பிரபலம் பெற்றிருந்தாலும், நாட்டின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் அவருக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. அவரது போட்டியாளரும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருமான லிஸ் டிரஸ், வாக்கெடுப்பில் அவரை விட மிகவும் முன்னிலை பெற்று புதிய பிரதமர் ஆகவுள்ளார்.

ரிஷி சுனக் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் அது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக இருந்திருக்கும். அவர் பிரிட்டனின் வெள்ளையர் இனம் அல்லாத முதல் பிரதமர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரதமர் ஆகிய பெருமைகளைப் பெற்றிருப்பார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com