ஜூலன் கோஸ்வாமி: முடிவுக்கு வருகிறது இரு தசாப்த கிரிக்கெட் வாழ்க்கை – இந்திய ‘வேகப் பெண்’ சாதித்தது என்ன?

Share

  • வந்தனா
  • பிபிசி

ஜூலன் கோஸ்வாமி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் ஈடன் கார்டன் மைதானம், 1997ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க் பந்தை நாலாபுறமும் அடித்து நொறுக்கினார்.

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வளர்ந்த ஜூலன் கோஸ்வாமி என்ற 15 வயது பெண், அங்கு பந்து பொறுக்கிப்போடும் பெண்ணாக மைதானத்தில் இருந்தார்.

ஆஸ்திரேலியாவின் விளையாட்டை திகைத்துப் பார்த்த அந்தத் தருணம், தன்னைப் பற்றி மதிப்பீடு செய்துகொள்வதற்கான தருணமாகவும் ஜூலன் கோஸ்வாமிக்கு இருந்தது. கிரிக்கெட்தான் தன்னுடைய வாழ்க்கை என்பதை ஜூலன் முடிவு செய்தார்.

இரு தசாப்தங்களின் புகழ்பெற்ற வாழ்க்கைக்குப் பிறகு 39 வயதான ஜூலன் கோஸ்வாமி உலகின் தலைசிறந்த பெண் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com